தரமான முறையில் பலகாரங்கள் தயாரிக்கப்படுகிறதா? இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
புதுவையில் உள்ள இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
புதுச்சேரி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவீட் (இனிப்பு பலகாரங்கள்) விற்பனை சூடுபிடித்துள்ளது. மக்கள் பலகாரங்களை தங்கள் வீடுகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்க வாங்கி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரி தன்ராஜ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இனிப்பு கடைகளில் நேற்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது பலகாரங்கள் அனைத்தும் தரமான முறையில் செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தினார்கள்.
தரமான எண்ணெய்
மேலும் பலகாரங்கள் செய்யப்படும் பகுதிக்கு சென்று அதற்கு தரமான எண்ணெய் பயன்படுத்தப்படுகிறதா? பலகாரங்கள் ஏதேனும் கெட்டுப்போய் உள்ளதா? என்பது குறித்தும் சோதனை நடத்தினார்கள்.
கடைக்காரர்களிடம் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.