புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது

புதுச்சேரியில் 5 சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தேசிய முக்கியத்துவமாகி விட்டது என குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் தெரிவித்தார்.

Update: 2020-11-12 22:50 GMT
வில்லியனூர், 

வில்லியனூர் கீழ்சாத்த மங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது53). கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை நடத்தி வந்தார். இவர் கொத்த டிமைகளாக வைத்து இருந்த 5 சிறுமிகளை மீட்டு விசாரித்ததில் பண்ணையில் அடைத்து வைத்து போதைப் பொருட்கள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார் (27), உறவினர் பசுபதி, அய்யனார் (23), வானூர் வேட்டைக்காரர்களான சிவா, மூர்த்தி ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதையடுத்து கன்னியப் பனின் இளைய மகன் சரத்குமாரும் (22), 15 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டனர்.

தாமாக முன்வந்து விசாரணை

இந்த விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இதற்காக தேசிய குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் நேற்று புதுச்சேரி வந்தார். மங்கலம் போலீஸ் நிலையம், வாத்துப் பண்ணை உரிமையாளர் வீடு உள்பட பல்வேறு இடங்களை பார்வையிட்டார்.

அப்போது வில்லியனூர் துணை கலெக்டர் அஸ்வின் சந்துரு, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, குழந்தைகள் மேம் பாட்டு கழக இயக்குனர் அசோகன், புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன், தாசில்தார் அருண், போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ஆனந்த் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

தேசிய முக்கியத்துவம்

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் எடுத்த நடவடிக்கை, சிறுமிகளின் பாதுகாப்பு, குற்றம் சாட்டப் பட்டவர்களை எந்த வகை யில் தண்டிப்பது என்பது குறித்து ஆலோசிக் கப்பட்டு வருகிறது. வந்தவாசியில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்கு சிறுமிகள் விற்கப்பட்டு இருக்கிறார்கள். மீட்கப்பட்ட அவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு மனரீதியான ஆலோசனை வழங்கப் படுகிறது. குழந்தை களுக்கு உண்டான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

காவல்துறையின் விசாரணை சரியான முறையில் சென்று கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை 8 பேர் கைது செய்யப் பட்டுள் ளனர். மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப் படுவார்கள்.

இதில் சம்பந்தப்பட்ட வர்கள் தண்டிக்கப்பட வேண் டும். புதுவையில் இது போன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கி றோம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தாக இந்த வழக்கு உள்ளது. விசாரணை அறிக்கையை டெல்லியில் உள்ள ஆணைய தலைவரிடம் சமர்ப்பிக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்