விமானநிலைய ஆணைய நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்றுஇடம் அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி உத்தரவு

மும்பையில் விமானநிலைய ஆணையத்துக்கு சொந்தமான நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்றுஇடம் அளிக்க அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-11-12 22:16 GMT
மும்பை, 

மும்பை குர்லா பகுதியில் மித்தி நதிக்கரையோரம் விமானநிலைய ஆணையத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் சட்டவிரோதமாக 17 ஆயிரத்து 200 வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.

மறுவாழ்வு

இந்த ஆலோசனையின் போது, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தற்போது விமானநிலைய ஆணையத்திற்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்றுஇடம் வழங்க உத்தரவிட்டார். மேலும் அவர் முடிந்த வரை சீக்கிரமாக விமானநிலைய ஆணைய நிலத்தில் வாழும் மக்களை வேறுஇடத்திற்கு மாற்றப்பட வேண்டும், என்றார்.

இதில் குறிப்பாக கிராந்திநகர், சந்தேஷ்நகர் குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல் முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்