ஈரோட்டில் ஸ்ரீகண்ணன் பட்டாசு விற்பனை நிலையங்களில் தீபாவளி பட்டாசுகள் வாங்க வருபவர்களுக்கு - முகக்கவசம் இலவசம்
ஈரோட்டில் ஸ்ரீகண்ணன் பட்டாசு விற்பனை நிலையங்களில் தீபாவளி பட்டாசுகள் வாங்க வரும் அனைவருக்கும் முகக்கவசம் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஈரோடு,
தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடி வருகிறார்கள். தீபாவளி பண்டிகை மிக அருகில் வந்து விட்டதால், பட்டாசு கடைகள் வீதிகள் தோறும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஈரோட்டில் ஸ்ரீ கண்ணன் பட்டாசு உலகம் என்ற பெயரில் மாநகரின் பல பகுதிகளிலும் பட்டாசு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு வரும் அனைவருக்கும் முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி உரிமையாளர்கள் ஜி.பிரகாஷ், என்.பிரகாஷ் ஆகியோர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகை என்பது நமது பண்பாடு தொடர்பான முக்கிய பண்டிகையாக உள்ளது. இந்த நல்ல நாளில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது என்பது பாரம்பரியமாக இருக்கிறது. ஆனால், கொரோனா தொற்று காலத்தில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். எனவே இந்த ஆண்டு பொதுமக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் சேருவதை தவிர்க்கும் வகையில் 7 இடங்களில் பட்டாசு கடைகள் அமைத்து இருக்கிறோம்.
அதன்படி ஈரோடு கரூர் மெயின் ரோடு ஆஸ்ரம் பள்ளி எதிரில், பெருந்துறை ரோட்டில் ஈஸ்வரமூர்த்தி மகால் எதிரில், பெருந்துறை ரோடு பழையபாளையம் சுந்தரம் ஹோண்டா அருகில், பூந்துறை ரோட்டில் அண்ணமார் பெட்ரோல் பங்க் பஸ் நிறுத்தம், ஜேசீஸ் பள்ளி பஸ் நிறுத்தம் திருமலை ஏஜென்சிஸ் ஹாலோ பிரிக்ஸ் அருகில், மூலப்பாளையம் சரஸ்வதி மகால் எதிரில், சென்னிமலைரோடு டீசல் செட் அருகில் என்று 7 இடங்களிலும் வாகன நிறுத்த வசதியுடன், பொதுமக்கள் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் விரிவான இடவசதியுடன் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையாக முகக்கவசங்கள் வழங்கி வருகிறோம். சானிடைசர்கள், கைகழுவும் வசதியும் உள்ளது.
சிவகாசியில் இருந்து சிறந்த பட்டாசு நிறுவனங்களான ஸ்டாண்டர்டு, அய்யன், ஸ்ரீகிருஷ்ணா, ஏ.ஆர்.டி. ஆகிய நிறுவனங்களில் இருந்தும் சிறந்த தரமான பட்டாசு வகைகளை கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் தரமான பட்டாசுகள் மட்டுமே உள்ளன. 300-க்கும் மேற்பட்ட வகை பட்டாசு மற்றும் மத்தாப்பு, வாணவேடிக்கை வகைகள் உள்ளன. மத்தாப்பு வகைகள் 7 செ.மீட்டர் முதல் 100 செ.மீட்டர் வரை நீளத்தில் உள்ளன. பச்சை, மஞ்சள், சிவப்பு, தம்தமாக்கா என 40 வகை மத்தாப்புகள் உள்ளன. சங்கு சக்கரங்கள் 35 வகைகளில் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் பாம் வகைகள், வானில் வேடிக்கை நிகழ்த்தும் ராக்கெட்டுகள், பாராசூட் வகைகள் குவிக்கப்பட்டு உள்ளன. 10 சாட் வெடி முதல் 500 சாட் வெடிவரை பல்வேறு ரகங்களில் இருக்கின்றன. இவை வானில் வெடிக்கும்போது பல வண்ணங்களில் மிளிர்ந்து பார்ப்பவர்களை பரவசம் அடையச்செய்யும்.
சரவெடிகள் 10 ஆயிரம் வாலாவரை உள்ளன. பென்சில், சாட்டை, புஷ்வாணங்கள் என்று அனைத்தும் மிகக்குறைந்த விலையில் தரமாக வழங்குகிறோம். பொதுமக்கள் தாங்களாகவே அவர்கள் விரும்பும் பட்டாசுகளை தேர்வு செய்யும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம்.
தீபாவளி பண்டிகைக்கு அரசு குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசுகளை வெடித்து, நமது பாரம்பரிய விழாவை மகிழ்ச்சியாக அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். பட்டாசுகள் வெடிக்கும்போது போதிய பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.