சகாயநகர் ஊராட்சியில் ரூ.60 லட்சத்தில் கூட்டமைப்பு கட்டிடம் தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்
சகாயநகர் ஊராட்சியில், கூட்டமைப்பு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
ஆரல்வாய்மொழி,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நீதி திட்டத்தின் கீழ், சகாய நகர் ஊராட்சிக்குட்பட்ட அனந்த பத்மநாபபுரம் ஆசிரியர் காலனியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.60 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கி இருந்தது. அதன் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு சகாய நகர் ஊராட்சி தலைவர் மகேஷ் ஏஞ்சல் தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், துணைத் தலைவர் லாயம்ஷேக், ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பங்கேற்று கூட்டமைப்பு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) ஜெயந்தி, தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ரோகினி அய்யப்பன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் தர்மர், சகாயநகர் ஊராட்சி துணைத்தலைவர் ராஜம், அ.தி.மு.க. மாவட்ட இணைச் செயலாளர் லதா ராமச்சந்திரன்.
ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மணி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் பிரபு, தாழக்குடி அ.தி. மு.க பேரூர் செயலாளர் அய்யப்பன், வார்டு உறுப்பினர்கள் முருகப்பன், ராஜ்குமார், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டவர்கள்.