கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிப்பு - தமிழக அரசு உத்தரவு
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்க அரசாணை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர்களுக்கு இந்தாண்டு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என நவ.,2ல் தமிழக அரசு அறிவித்தது. இதில் கூட்டுறவு சங்கங்கள் இடம் பெறவில்லை. இந்தநிலையில் தமிழக அரசின் போனஸ் அறிவிப்பு பட்டியலில் கூட்டுறவு சங்கங்கள் இடம் பெறாததால் சங்க பணியாளர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.
இந்நிலையில் தீபாவளி நாளை மறுநாள் கொண்டாடப்படும் நிலையில் கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச போனஸ் 8.33%, கருணைத் தொகை 1.67% சேர்த்து 10% போனஸ் வழங்கப்படும் என அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.