கருணாநிதி பெயரிலான காலை சிற்றுண்டி திட்டம் இன்று தொடங்கப்படுகிறது

கருணாநிதி பெயரிலான காலை சிற்றுண்டி திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

Update: 2020-11-11 20:26 GMT
புதுச்சேரி, 

புதுவையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறைந்த கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து திட்டத்தை நிறைவேற்ற அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி சிற்றுண்டி திட்டம் இன்று (வியாழக்கிழமை) தொடங்க முடிவு செய்யப்பட்டது. முதலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வைத்து தொடங்கி வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பல்வேறு காரணமாக அவர் இதில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

தொடக்கவிழா

இருந்தபோதிலும் தி.மு.க. முன்னணி தலைவர் ஒருவரை விழாவில் கலந்துகொள்ளச் செய்வதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி திட்ட தொடக்கவிழா புதுவை காராமணிக்குப்பத்தில் உள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்குகிறார். கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வரவேற்றுப் பேசுகிறார். சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் சிவா, ஜான்குமார், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.

ஆர்.எஸ்.பாரதி எம்.பி.

சிறப்பு விருந்தினராக தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ். பாரதி எம்.பி. கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவில் முக்கிய பிரமுகர்கள், அரசுப் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொள்கின்றனர். முடிவில் வளர்ச்சி ஆணையரும் கல்வித்துறை செயலாளருமான அன்பரசு நன்றி உரையாற்றுகிறார்.

இந்த திட்டத்தின்படி மாணவர்களுக்கு காலையில் இட்லி, கேசரி, பொங்கல் போன்ற உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன.

மேலும் செய்திகள்