நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்புக்காக போலீஸ் துறைக்கு 751 இருசக்கர வாகனங்கள் எடியூரப்பா வழங்கினார்
நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்புக்காக போலீஸ் துறைக்கு 751 இருசக்கர வாகனங்களை முதல்-மந்திரி எடியூரப்பா வழங்கினார்.
பெங்களூரு,
நாட்டிலேயே கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பி.எம்.டி.சி. பஸ்களில் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெண்களின் மீதான பார்வையை மாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். கர்நாடகத்தில் 700 போலீஸ் நிலையங்களில் பெண்கள் உதவி மையங்கள் அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்புக்காக 751 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் போலீஸ் துறைக்கு மேலும் பலம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
காவலர்களை நியமிக்க...
போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேசுகையில், “கர்நாடக போலீசார் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க நேர்மையான முறையில் சிறப்பாக செயல்படுகிறார்கள். கடந்த ஓராண்டில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றிகரமான முறையில் சென்று கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து மேற்கொள்ளப்படும். 16 ஆயிரம் காவலர்களை நியமிக்க முதல்-மந்திரி அனுமதி வழங்கியுள்ளார். குற்ற வழக்குகளுக்கு முக்கியமாக தேவைப்படும் எப்.எஸ்.எல். ஆய்வகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு பிறகு இதை எடியூரப்பா தொடங்கி வைப்பார்“ என்றார்.