சிதம்பரம் அருகே, திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை
சிதம்பரம் அருகே திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அருகே உள்ள இடையான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் கார்த்திக் (வயது 22). ஆட்டோ டிரைவர். இவருக்கும் காட்டுமன்னார்கோவில் தாலுகா, ரெட்டியூர் கீழதெருவை சேர்ந்த முருகன் மகள் சுவேதா (20) என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி திருமணம் நடைபெற்றது. சுவேதா டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக, வாழப் பிடிக்காமல் சுவேதா வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. இதையடுத்து, கடந்த 5-ந்தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுவேதாவின் தந்தை முருகன் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் சுவேதாவுக்கு திருமணமாகி 4 மாதமே ஆவதால் வரதட்சணை கொடுமை ஏதேனும் உள்ளதா என சிதம்பரம் சப் - கலெக்டர் மதுபாலன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான மூன்று மாதத்திலேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.