அரியலூரில், கொரோனாவால் மேலும் 10 பேர் பாதிப்பு - பெரம்பலூரில் 5 பேருக்கு தொற்று

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2020-11-10 22:00 GMT
அரியலூர் ,

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2 ஆயிரத்து 205 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் குணம் அடைந்த 2 ஆயிரத்து 133 பேர் வெவ்வேறு நாட்களில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். 21 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 51 பேர் பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 210 ஆக உயர்ந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் நகராட்சியில் ஒருவரும், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேரும், செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவரும், தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவரும், ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவரும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவரும், அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவரும் என மொத்தம் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,472 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 4,166 வீடு திரும்பியுள்ளனர். 47 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நேற்று மொத்தம் 533 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்