மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 9,529 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களை சேர்ந்த 3 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,526 ஆக குறைந்தது.
இதற்கிடையே நேற்று கல்லாங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர், சித்தம்பூண்டி அங்கன்வாடி உதவியாளர் உள்பட 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. வழக்கம்போல் நேற்றும் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பள்ளிபாளையம் பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,580 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 27 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 9,039 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 97 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 444 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.