மராட்டிய அரசு அனைத்து முனைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது சந்திரகாந்த் பாட்டீல் குற்றச்சாட்டு

மராட்டிய அரசு அனைத்து முனைகளிலும் தோல்வி அடைந்துவிட்டதாக மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் குற்றம் சாட்டி உள்ளார்.;

Update: 2020-11-09 18:56 GMT
அவுரங்காபாத், 

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று அளித்த பேட்டியில் ஆளும் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழகம் கடந்த சில மாதங்களாக சம்பளத்தொகையை வழங்காததால் 2 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

அதுமட்டும் இன்றி ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த 28 முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டனர்.

பயிர்நாசம்

கொங்கன் பகுதியை தாக் கிய சிசர்கா புயல் மற்றும் கனமழை காரணமாக விதர்பா மற்றும் மரத்வாடா பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளைபயிர்களை இழந்துள்ளனர். இதனால் கடும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ள அவர்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு நிவாரணம் வழங்க தவறிவிட்டது.

இப்படி அரசு அனைத்து முனைகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை துடைக்க ஆளும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லையெனில் நிலைமைய சீராக்க பாரதீய ஜனதாவினர் வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்