பாப்பாரப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் பாரதமாதா நினைவாலயத்தை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
பாப்பாரப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் பாரதமாதா நினைவாலயத்தை சுற்றுலாதலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.;
தர்மபுரி,
தர்மபுரி பாரதமாதா ஆன்மிக சேவை மையம் சார்பில் தியாகி சுப்ரமணிய சிவாவின் பாரதமாதா மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் காந்தி, நேரு ஆகியோரது முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் மற்றும் சிலைகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் எம்.பி தீர்த்தராமன் தலைமை தாங்கினார். தகடூர் புத்தகப்பேரவை தலைவர் டாக்டர் செந்தில், செந்தில் பள்ளி நிர்வாக அலுவலர் சக்திவேல், எம்.எல்.ஏக்கள் ஏ.கோவிந்தசாமி, வி.சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், ஆன்மிக பேரவை தலைவர் குரு ராவ், துணைத்தலைவர் பாலமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆன்மிக பேரவை பொருளாளர் முத்து வரவேற்று பேசினார்.
விழாவில் தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பாரதமாதா மணிமண்டபம் மற்றும் காந்தி, நேரு சிலைகளை திறந்து வைத்து பேசினார். விழாவுக்கு பாராட்டு தெரிவித்து மகாத்மா காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் வாழ்த்து கடிதத்தை அனுப்பி இருந்தார். அதனை மேடையில் தர்மபுரி தமிழ்ச்சங்க செயலாளர் ஆசிரியர் சவுந்தரபாண்டியன் வாசித்தார்.
விழாவில் அமைச்சர் பேசுகையில், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் அவரது கனவான பாரதமாதா நிலையத்தை தமிழக அரசு அமைத்து வருகிறது.
அந்த நினைவாலயம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் சுற்றுலாதலமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகரின் மையப்பகுதியில் இந்த மணிமண்டபம் மற்றும் சிலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட பாரதமாதா ஆன்மிக பேரவை குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
விழாவில் டாக்டர் செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.என்.பி. இன்பசேகரன், மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கோவி சிற்றரசு, மாவட்ட பா.ஜ.க. தலைவர் அனந்தகிருஷ்ணன், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் மோகன், நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய தர்மபுரி அன்னசாகரம் பகுதியை சேர்ந்த தியாகி சிவகாமி அம்மையார் கவுரவிக்கப்பட்டார். முடிவில் பாரதமாதா ஆன்மிக சேவை மைய பொதுச்செயலாளர் தகடூர் வேணுகோபால் நன்றி கூறினார். இதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.