கரூர் தெற்கு காந்தி கிராமத்தில் பழுதடைந்து கிடக்கும் குடிநீர் தொட்டி அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர் தெற்கு காந்தி கிராமத்தில் பழுதடைந்து கிடக்கும் குடிநீர்தொட்டி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

Update: 2020-11-09 04:43 GMT
கரூர்,

கரூர் நகராட்கிக்கு உட்பட்ட தெற்கு காந்திகிராமம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் 2-வது கிராஸ் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து நீர் எடுத்து அருகில் குடிநீர் தொட்டியில் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் நாளடைவில் ஆண்டுகளில் அப்பகுதி விரிவடைந்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் வந்ததின் பேரில் ஏற்கனவே வினியோகிக்கப்பட்ட நீர் போதிய அளவில் இல்லாததாலும், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டதாலும் ஏற்கனே அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

மேலும் தொட்டியின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் நீட்டிக் கொண்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் அதன் அடிப்பகுதி எப்ப வேண்டுமானும் விழும் நிலையம் சேதம் அடைந்து உள்ளது. இதன் அருகே விநாயகர் கோவில், அரசு தொடக்க பள்ளியும் செயல்பட்டு வருகின்றது.

இதனால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளதால் உடனடியாக அந்த குடிநீர் தொட்டியை உடனடியாக அகற்றப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்