தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரக்கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தில் நேற்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2020-11-08 13:41 GMT
அரக்கோணம், 

அரக்கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தில் நேற்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே பழைய போனசை வழங்கக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ஒருநாள் அடையாள உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் வந்த சரக்குகளை இறக்காமல் தேங்கி நின்றன.

மேலும் செய்திகள்