அரசியல் களம் காண வாய்ப்புள்ளது: ‘ரஜினிகாந்தின் அறிக்கை முற்றுப்புள்ளி அல்ல’ செ.கு.தமிழரசன் பேட்டி

‘ரஜினிகாந்தின் அறிக்கை முற்றுப்புள்ளி அல்ல என்றும் அவர் அரசியல் களம் காண வாய்ப்புள்ளது’ என்றும் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-08 12:51 GMT
வேலூர், 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை பாதி நடத்திவிட்டு மீதி தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயக சிதைவு. எனவே தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஒருவேளை தற்போது தேர்தல் வைத்தால் அதில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு எத்தனை ஆண்டு ஆட்சி காலம் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். தமிழகத்தில் மக்கள் தொகை உயர்ந்துள்ளதால் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்து 40 ஆக உயர்த்த வேண்டும்.

அரசியல் கட்சிகள் ஒடுக்கப்பட்ட மக்களை வாக்கு எந்திரங்களாக பார்க்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து இடஒதுக்கீடு பெற பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம். மனதால் நினைத்தால் கூட அது வன்கொடுமைதான். ஆனால் இதற்கு எதிராக உள்ளது நீதிமன்ற தீர்ப்பு. இதை மத்திய-மாநில அரசுகள் நீர்த்துப் போக செய்துள்ளது. சாதிய ஆணவ தடுப்பு சட்டம் வேண்டும். ரஜினிக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அவர் தனது உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அது முற்றுப்புள்ளி அல்ல. ‘கமா’ தான். எனினும் அவரின் உடல்நலம் தான் முக்கியம். ஆனால் அவர் அரசியல் களம் காண வாய்ப்பு உள்ளது.

தெளிவான கருத்து இல்லை

கட்சி தொடங்கி குறிப்பிட்ட காலத்துக்குள் ஆட்சி அமைத்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. வருகிற மே மாதம் தேர்தல் நடக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 7 பேர் விடுதலையில் தி.மு.க.கூட்டணியில் ஒத்த கருத்து இல்லை. பா.ஜ.க.வுக்கும் தெளிவான கருத்து இல்லை. மனிதாபிமான அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்