வருகிற 26-ந் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்

வருகிற 26-ந் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.;

Update: 2020-11-08 11:44 GMT
திருவாரூர், 

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து வருகிற 26-ந் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம் குறித்த தொழிற்சங்கங்களின் சார்பில் கூட்டம் திருவாரூர் வார்த்தக சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர்கள் குருநாதன் (தொழிலாளர் முன்னேற்ற சங்கம்), மாலதி (சி.ஜ.டி.யூ.), குணசேகரன்(ஏ.ஜ.டி.யூ.சி.), அம்பிகாபதி (ஜ.என்.டி.யூ.சி.) ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் நிவாரண தொகை வழங்க வேண்டும். ஒரு நபருக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள் வேலையாக உயர்த்தி நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்து அதில் வழங்கப்படும் குறைந்தபட்ச கூலியை அதிகரிக்க வேண்டும்

வேலை நிறுத்தம்

விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வேண்டும்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி வருகிற 26-ந் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் சந்திரசேகர ஆசாத் (ஏ.ஜ.டி.யூ.சி.) முருகையன் (சி.ஜ.டி.யூ), மகாதேவன்(தொ.மு.ச.), பாண்டியன் (ஜ.என்.டி.யூ.சி), ஆட்டோ தொழிற் சங்க மாவட்ட செயலாளர் அனிபா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்