சிக்னல் கம்பங்கள் பழுதால் பெரம்பலூரில் போக்குவரத்து நெருக்கடி

சிக்னல் கம்பங்கள் பழுதால் பெரம்பலூரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

Update: 2020-11-08 05:43 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தினால் வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் முக்கிய சந்திப்பு சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தடுத்திடவும், போக்குவரத்தை சீரமைத்திடவும் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டது.

அதன்படி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்தை சீரமைத்திட ரோவர் ஆர்ச், காமராஜர் வளைவு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டது. சிக்னல் கம்பங்களில் விளக்குகள் எரிவதை கண்காணித்து போலீசார் போக்குவரத்தினை சீரமைத்து வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் கம்பங்களில் பழுது காரணமாக, அதில் உள்ள விளக்குகள் எரிவதில்லை.

அந்த பகுதியில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் கை சைகையால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை சிரமத்துடன் செய்து வருகின்றனர். மற்ற வேளைகளில் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி, அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அந்தப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோவர் ஆர்ச் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பங்களில் ஏற்பட்டுள்ள பழுதினை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்