காலாப்பட்டு தொகுதியில் தரமற்றதாக மாறும் நிலத்தடி நீர்; பொதுமக்கள் அவதி - வன்னியர் பாதுகாப்பு பேரியக்கம் புகார்

காலாப்பட்டு தொகுதியில் நிலத்தடி நீர் தரமற்றதாக மாறி விட்டதால் பொதுமக்கள் அவதிப்படுவதாக வன்னியர் பாதுகாப்பு இயக்கம் புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து வன்னியர் பாதுகாப்பு பேரியக்க தலைவர் செந்தில் கவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

Update: 2020-11-08 02:52 GMT
புதுச்சேரி,

காலாப்பட்டு தொகுதியில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் குடிநீர் கிடைத்து வந்தது. இந்த நிலை மாறி தற்போது சுத்தமான குடிநீருக்காக காலாப்பட்டு தொகுதி மக்கள் அவதிப்படும் சூழ்நிலையை புதுவை அரசு ஏற்படுத்தியுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட தனியார் தொழிற்சாலைகள் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கின்றன.

இதனால் விவசாய நிலங்கள் அழிந்து வருகின்றன. ரசாயன கழிவுகளால் நிலத்தடிநீர் தரமற்றதாக மாறி வருகிறது. காலாப்பட்டு தொகுதி மக்கள் தொகைக்கேற்ப அரசு தேவையான குடிநீர் தேக்க தொட்டிகளை கட்டித்தரவில்லை. இதனால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து குடிநீரை வாங்குகின்றனர்.

எனவே காலாப்பட்டு தொகுதியில் அதிக இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். தேர்தலின் போது தரமான குடிநீர் வழங்குவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு அதன்பின்அதனை மறப்பது அரசுக்கு வாடிக்கையாக உள்ளது. வருகிற தேர்தலில் அரசுக்கு மக்கள் சரியாக பாடம் புகட்டுவார்கள். காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு தரமான குடிநீர் கிடைக்கும் வரை வன்னியர் பாதுகாப்பு பேரியக்கம் தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்