சிங்கப்பெருமாள் கோவில் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் சாவு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் தமிழ்காவியன் (வயது 12). நேற்று முன்தினம் மாலை செங்குன்றம் அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தான்.
அப்போது திடீரென கிணற்றில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தான். தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.