கும்மிடிப்பூண்டி அருகே, வடமாநில தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளி ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-11-07 21:45 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் தீபக்குமார் (வயது 26). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த ம.பொ.சி. நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 1-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது தீபக்குமார், தனது உடலில் திடீரென மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபக்குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து வட மாநில தொழிலாளியின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்