தொடர் மழை காரணமாக கேத்தி பாலாடாவில் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது - 7 வீடுகள் சேதம்
தொடர் மழை காரணமாக கேத்தி பாலாடாவில் விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. குன்னூர் கோத்தகிரி 7 வீடுகள் சேதமடைந்தன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் தீவிரமாக பெய்து வருகிறது. குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எடப்பள்ளி, கேத்தி பாலாடா போன்ற பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் அதிகரித்து உள்ளது.
கேத்தி பாலாடாவில் பெய்த கனமழையால் விளைநிலங்களுக்கு நடுவே செல்லும் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கால்வாயை ஒட்டி உள்ள விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் 10 ஏக்கருக்கும் மேல் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
குன்னூர் கரோலினா பகுதியில் பத்மாவதி என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில் சமையல் அறை முழுவதும் சேதமடைந்ததுடன், வீட்டில் இருந்த பத்மாவதி உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்பகுதியில் 3 வீடுகளில் வெள்ளம் புகுந்து பொருட்கள் நாசமானது.
அதேபோல் சின்ன கரும்பாலம் பகுதியில் கிருஷ்ணன், பேரட்டி கீழ் பாரத்நகர் பகுதியில் பாலன், அண்ணாநகர் பகுதியில் அம்பிகா ஆகியோரின் வீடுகளின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. மழை காரணமாக குன்னூர், கோத்தகிரி 7 வீடுகள் சேதமடைந்தன.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-21.2, கோத்தகிரி-119, கீழ் கோத்தகிரி-63, கிண்ணக்கொரை-99, குன்னூர்- 67, பர்லியார்-70, கேத்தி-51, எடப்பள்ளி-65 உள்பட மொத்தம் 1127.2 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 38.88 ஆகும்.