சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டாக்சி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டாக்சி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு,
ஈரோட்டை சேர்ந்தவர் தீனதயாளன். கால் டாக்சி டிரைவர். இவருக்கு, ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் கணவரை இழந்து, அவருடைய 8 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். தீனதயாளனுடன் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. கணவரை இழந்த அந்த பெண்ணை தீனதயாளன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு திருமணமானதால், அந்த பெண் அவருடைய மகளை ஈரோடு அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து, படிக்க வைத்து வந்தார்.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூடங்கள் விடுமுறை என்பதால், அந்த சிறுமி அம்மாவுடன் வந்து தங்கி இருந்தார். ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பெண், வழக்கமாக தான் செல்லும் தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வருவது வழக்கம். கடந்த ஒரு மாதமாக டாக்சி டிரைவர் தீனதயாளன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
தனியாக இருக்கும் குழந்தைக்கு துணையாக தீனதயாளன் இருப்பார் என்று நம்பிய அந்த பெண் வழக்கம்போல வேலைக்கு சென்று வந்தார். கடந்த ஓரிரு நாட்களாக சிறுமி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் சிறுமி கடுமையான வலியால் அவதிப்பட்டதால், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார்.
அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி விவரம் தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் அந்த பெண்ணிடம் கூறினார்கள். அதுமட்டுமின்றி, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அதிகாரி தேன்மொழிக்கு தகவல் கொடுத்தனர்.
அதிகாரி தேன்மொழி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து குழந்தையிடம் ரகசிய விசாரணை நடத்தினார்கள். அப்போது கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த தீனதயாளன், தனது குழந்தை ஸ்தானத்தில் இருக்கும் குழந்தையை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.