தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆ.துரைக்கு நிர்வாகிகள் வாழ்த்து

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக ஆ.துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-11-07 01:43 GMT
தென்காசி,

தென்காசி வடக்கு மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆ.துரை கட்சியில் வட்டச் செயலாளராகவும், மதுரை சட்டக்கல்லூரி மாணவரணி தி.மு.க. செயலாளராகவும், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும், மாநில இளைஞரணி துணைச்செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள ஆ.துரையை தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்