குடியாத்தத்தில் லாரியில் தேங்காய்களுக்குள் மறைத்து 19 டன் ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்தல் - அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை
குடியாத்தத்தில் லாரியில் தேங்காய் மூட்டைகளுக்குள் மறைத்து 19 டன் ரேஷன் அரிசி கர்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் நகரம் வேலூர் மாவட்ட எல்லையிலும், ஆந்திர மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலம் எல்லைகளுக்கு அருகே உள்ளது. குடியாத்தம் வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக தொடர் புகார்கள் வந்தது.
இந்த நிலையில் குடியாத்தம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் இரவு கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.பானு, குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் என்.தேவி, கிராம நிர்வாக அலுவலர் விஜயபாஸ்கர் ஆகியோர் குடியாத்தம் டவுன் தங்கம்நகர் பகுதி அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
லாரியை ஓட்டி வந்த நபர் லாரியில் தேங்காய் மூட்டைகள் உள்ளதாகவும் கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் லாரியை சோதனை செய்ய முயன்றபோது லாரி டிரைவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து அதிகாரிகள் லாரியில் ஏறி பார்த்த போது தேங்காய் மூட்டைகளும், அதற்கு அடியில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதும் தெரியவந்தது. லாரியில் சுமார் 19 டன் எடை கொண்ட 389 ரேஷன் அரிசி மூட்டைகளும், 78 தேங்காய் மூட்டைகளும் இருந்தது. கடத்தல்காரர்கள் ரேஷன் அரிசி மூட்டைகளை முதலில் லாரியில் ஏற்றி விட்டு அதன் மீது தேங்காய் மூட்டைகளை ஏற்றி ரேஷன் அரிசியை மறைத்து தார்பாய் போட்டு கட்டி உள்ளது தெரிய வந்தது. பின்னர் அதிகாரிகள் சுமார் 19 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிடிபட்ட லாரி மேல்நடவடிக்கைக்காக வேலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தி சென்றது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.