மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-11-06 05:17 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் பதுக்கலுக்கும், விலை உயர்வுக்கும் வழிவகுக்கும் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை பாதிக்கும் மின்சார திருத்த சட்ட மசோதாவை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். இத்தகைய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

பல்வேறு அமைப்பினர்

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனி ராஜன், தமிழக விவசாய முன்னணியை சேர்ந்த அருணாச்சலம், தமிழக மக்கள் புரட்சி கழகத்தை சேர்ந்த அரங்க.குணசேகரன், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராசு மற்றும் விவசாயிகள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்