வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
புதுக்கோட்டை,
விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.சோமையா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் சங்கர் தொடங்கி வைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் நிறைவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமையன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.