திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 148 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 148 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளானார்கள்.

Update: 2020-11-05 22:15 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 38 ஆயிரத்து 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 36 ஆயிரத்து 908 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 941 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 627 பேர் கொரரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 42 ஆயிரத்து 676 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 688 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 52 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 30, 29 வயதுடைய ஆண்கள், 27 வயதுடைய பெண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 102 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 20 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் 25 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 401 உயர்ந்தது. 484 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்