தென்காசியில், மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் மருந்தாளுனர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-11-05 22:00 GMT
தென்காசி,

தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வு துறையில் காலியாக உள்ள 750-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு அரசு விதிகளின்படி முறையாக பணி நியமனம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 30 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சங்க மாவட்ட தலைவர் நவாஸ்கான் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அசோக், முருகன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் துரை சிங் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் குமார் கோரிக்கை குறித்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் சேகர் வாழ்த்தி பேசினார். பொருளாளர் கோமதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்