கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-04 23:56 GMT
புதுக்கோட்டை, 

தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, புதுக்கோட்டை மின் பகிர்மான வட்டம் சார்பில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மின்சார தொழிலாளர் சம்மேளத்தின் செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். தொ.மு.ச. செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் நடராஜன், கண்ணன், முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மின் உற்பத்தி திட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர், பொறியாளர் பதவிகளை பறிக்க கூடாது. துணை மின் நிலையங்கள் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. பதவி உயர்வுகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் பறிக்க கூடாது.

போனஸ்

மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதிநேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி போனஸ் வழங்க வேண்டும். சரண்டர் விடுமுறைக்கான தொகையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி

இதேபோல, அறந்தாங்கி அரசு பணிமனை முன்பு தொ.மு.ச. சார்பில் தீபாவளி போனஸ் அறிவிப்பை கண்டித்து தொ.மு.ச. செயலாளர் யோகராசா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. தற்போது கொரோனாவை காரணம் காட்டி 10 சதவீதம் போனஸ் மட்டுமே அறிவித்துள்ள மாநில அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்