கழனிப்பாக்கம் ஊராட்சியில் இடிந்துவிழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிய தொட்டி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கழனிப்பாக்கம் ஊராட்சியில் இடிந்துவிழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிய தொட்டி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அணைக்கட்டு,
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கழனிபாக்கம் ஊராட்சியில் உள்ளது முத்துநாயக்கன்பட்டி கிராமம். இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 20 ஆண்டுகளுக்கு முன் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முற்றிலும் சேதமடைந்து எப்பொழுது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் எங்கள் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.