மானாமதுரை அருகே ரேஷன்கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் - தரமற்ற அரிசி வழங்கியதாக புகார்
மானாமதுரை அருகே ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக கூறி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ளது சின்னகண்ணனூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்ட கிருஷ்ணாபுரம், எஸ்.கரிசல்குளம் ஆகிய கிராமத்தில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்காக சின்னகண்ணனூர் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் சுமார் 350 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த கடையில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 6 மாத காலமாக புழு, வண்டுகளோடு துர்நாற்றம் வீசிய தரமற்ற அரிசியை வினியோகம் செய்து வருவதாக அப்பகுதி கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றும் இதேபோல் தரமற்ற அரிசியை வழங்கியதால் ஆத்திரமடைந்த இந்த கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த கடையின் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதி கிராம மக்களுக்கு கடந்த 6 மாத காலமாக இந்த ரேஷன் கடையில் புழு மற்றும் வண்டுகள் அதிகளவில் காணப்படும் தரமற்ற அரிசியை இங்குள்ள ஊழியர்கள் வினியோகம் செய்து வருகின்றனர். இந்த அரிசியை கொண்டு வீட்டில் உணவு ஆக்கினால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இந்த அரிசியால் சமைக்கப்படும் உணவை ஆடு, மாடுகளுக்கு கூட வைக்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து கடந்த 6 மாத காலமாக இந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் கூறினால் சரிவர பதில் அளிப்பதில்லை. கிராம மக்கள் போராட்டம் குறித்து தகவலறிந்த மானாமதுரை ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் லதாஅண்ணாத்துரை, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, பாண்டியம்மாள், ஊராட்சி மன்ற தலைவர் அங்குச்சாமி, துணைத்தலைவர் ரவி, தி.மு.க மேற்கு ஒன்றிய துணை செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசியை ஆய்வு செய்தனர்.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் கொடுத்து இனிவரும் காலங்களில் தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.