வேப்பூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 8 பேர் கைது 39 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பறிமுதல்
வேப்பூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 39 பவுன் நகை மற்றும், 1½ கிலோ வெள்ளி நகையையும் பறிமுதல் செய்தனர்.
வேப்பூர்,
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் சோதனை சாவடியில் டெல்டா பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பஸ்சை மறித்து சோதனை செய்தனர். அதில் பஸ்சில் இருந்து 4 பேர் மூட்டைகளுடன் இறங்கி ஓடினர். அவர்களை போலீசார் துரத்தி சென்று பிடித்து, அவர்கள் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்தனர். அதில் அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது.
இதையடுத்து அவர்களை தீவிரமாக விசாரித்ததில், சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் அண்ணாதுரை (45), இவரது மகன் ரஞ்சித் (28), ராமு மகன் சூர்யா (18), பெருமாள் மகன் மூர்த்தி (24) என்பது தெரியவந்தது. இவர்கள் வேப்பூர், சிறுபாக்கம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளிகளான முருகன் மகன் சத்யா (19), பெருமாள் மனைவி லட்சுமி (40), ரஞ்சித் மனைவி மாரி (26), பழனி மனைவி சரிதா (33) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 39 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.