தீபாவளி போனஸ் குறைத்து அறிவித்ததை கண்டித்து: அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - 13 பணிமனைகளில் நடந்தது
தீபாவளி போனஸ் குறைத்து அறிவித்ததை கண்டித்து 13 பணிமனைகளில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இதுவரை 20 சதவீதம் தீபாவளி போனஸ் தொகையை பெற்று வந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு தொழிற்சங்கங்களை கலந்து பேசாமல் தன்னிச்சையாக 10 சதவீதம் குறைத்து வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை கண்டித்து நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அனைத்து பணிமனைகள் முன்பும் போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எண் 1, 2, 3 ஆகியவற்றின் முன்பு நேற்று அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி கண்டன உரையாற்றினார். இதில் சி.ஐ.டி.யு. தலைவர் மூர்த்தி, பொதுச்செயலாளர் ரகோத்தமன், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் மணி, ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் முருகானந்தம், மறுமலர்ச்சி தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன், அறிவர் அம்பேத்கர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் கணேசன், தொ.மு.ச. துணைத்தலைவர்கள் சந்திரசேகர், பெருமாள், ராஜேந்திரன், மனோகரன், அமைப்பு செயலாளர் வேலு, பிரசார செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பணிமனை செயலாளர்கள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.
இதேபோல் விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட செஞ்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி பணிமனை எண் 1, 2, சங்கராபுரம், சின்னசேலம், புதுச்சேரி, கோயம்பேடு ஆகிய பணிமனைகளிலும் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.