ஆசை வார்த்தைகள் கூறி சிறுமி பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் ராணுவ வீரர் கைது - திருமணம் செய்து வைத்த 6 பேர் மீது வழக்கு
தேனி அருகே ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பலாத்காரம் செய்த ராணுவ வீரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி,
தேனி அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்த கருப்பன் மகன் பாலகிருஷ்ணன் (வயது 29). இவர், ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர், 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார். பின்னர், அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோரும், பாலகிருஷ்ணனின் பெற்றோரும் திருமண வயதை எட்டாத அந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்தனர். கடந்த 30-ந்தேதி சிறுமியை பாலகிருஷ்ணன் திருமணம் செய்தார்.
திருமணம் செய்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியுடன் பாலகிருஷ்ணன் சேர்ந்து வாழ மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த இளம்வயது திருமணம் செய்த தகவல் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு கிடைத்தது. குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தியதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அவருக்கு இளம்வயது திருமணம் நடந்துள்ளதும் தெரியவந்தது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் பாலகிருஷ்ணனின் தந்தை கருப்பன், தாய் வெள்ளையம்மாள் மற்றும் சிறுமியின் பெற்றோர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.