கன்னியாகுமரி அருகே மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ ராட்சத தலைமீன் ரூ.10 ஆயிரத்துக்கு ஏலம் போனது

கன்னியாகுமரி அருகே மீனவர் வலையில் சிக்கிய 50 கிலோ எடையுள்ள அபூர்வ ராட்சத தலைமீன் ரூ.10 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

Update: 2020-11-04 04:12 GMT
கன்னியாகுமரி, 

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 72 கிலோ மீட்டர் தூரத்தில் மொத்தம் 48 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வள்ளம், கட்டுமரம் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிதொழில் செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள கேசவன்புத்தன்துறையைச் சேர்ந்த மீனவர்கள் வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடலில் வலைவீசி மீன்பிடித்து கொண்டிருந்த போது வலையில் ராட்சத மீன் ஒன்று சிக்கியது. உடனே அவர்கள் அந்த மீனுடன் கரைக்கு திரும்பி வந்தனர். பின்னர் அவர்கள் வலையில் சிக்கிய மீனை வெளியில் எடுத்து பார்த்த போது அது ராட்சத தலைமீன் என்பது தெரியவந்தது. அந்த மீன் 10 அடி நீளத்தில் 50 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

ரூ.10 ஆயிரம்

இந்த அபூர்வ மீனை மீனவர்கள் ஏலக்கூடத்திற்கு எடுத்து வந்து ஏலமிட்டனர். வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இறுதியாக இந்த மீன் ரூ.10 ஆயிரத்துக்கு ஏலம் போனது. கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தைச் சேர்ந்த மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று இந்த மீனை ஏலம் எடுத்தது. அதன் பிறகு அந்த மீன் வெளிமாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

மேலும் செய்திகள்