20 சதவீத போனஸ் வழங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

20 சதவீத போனஸ் வழங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-11-04 04:00 GMT
நாகர்கோவில், 

போக்குவரத்து, மின்வாரியம் உள்பட அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 20 சதவீத போனஸ் வழங்கியதாகவும், அதே போனசை இந்த ஆண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதே போல குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில், திருவட்டார், கன்னியாகுமரி உள்பட அனைத்து இடங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஸ்டீபன் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

தொ.மு.ச. பொதுச்செயலாளர் சிவன் பிள்ளை, பொருளாளர் கனகராஜ், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி நீலகண்டன், அமைச்சு பணியாளர்கள் சங்க நிர்வாகி பத்மநாபபிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர்கள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

குளச்சல்

குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பணிமனை தொ.மு.ச.செயலாளர் ராஜரத்னம் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜஸ்டின் முன்னிலை வகித்தார். பொருளாளர் குமார் விளக்கவுரை ஆற்றினார். ஐ.என்.டி.யு.சி.ரமேஷ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். 

மேலும் செய்திகள்