படப்பிடிப்பில் நடிகையை மானபங்கம் செய்ததாக தமிழ்ப்பட வில்லன் நடிகர் விஜய் ராஸ் கைது

படப்பிடிப்பில் நடிகையை மானபங்கம் செய்ததாக நடிகர் விஜய் ராஸ் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-11-03 22:15 GMT
மும்பை, 

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் ராஸ். இவர் ‘டெல்லி பெல்லி’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘பாம்பே டு கோவா’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கிசட்டை’ படத்தில் வில்லனாக நடித்து உள்ளார்.

இவர் நடித்து வரும் ‘ஷெர்னி’ என்ற படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பாலாகாட் மாவட்டத்தில் நடந்து வருகிறது.

இதற்காக படக்குழுவினர் மராட்டிய மாநிலம் கோண்டியாவில் உள்ள ஓட்டலில் தங்கி சென்று வருகின்றனர். இந்தநிலையில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நடிகை போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோண்டியா பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த நடிகை விஜய் ராசை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த தகவலை கோண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதுல் குல்கர்னி தெரிவித்தார். முன்னணி நடிகர் ஒருவர் மானபங்க வழங்கில் கைது செய்யப்பட்டு இருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்