பாவூர்சத்திரம் அருகே மாயமான பெண் பிணமாக மீட்பு

பாவூர்சத்திரம் அருகே மாயமான பெண் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2020-11-03 21:30 GMT
பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் அருகே உள்ள சடையப்பபுரம் வேளார் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி நாகம்மாள் (வயது 29). இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வெகுநாட்களாக கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி முதல் நாகம்மாளை காணவில்லை.

இதுதொடர்பாக அக்கம்பக்கத்திலும், உறவினர்கள் வீட்டிலும் தேடி வந்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு ஊர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் நாகம்மாள் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார், நாகம்மாள் உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி நாகம்மாளின் தகப்பனார் முருகன், பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்