நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36,185 பேர் குணமடைந்தனர் - மேலும் 614 பேருக்கு சிகிச்சை

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36 ஆயிரத்து 185 பேர் குணமடைந்து உள்ளனர். 614 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-11-03 21:45 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் பாளையங்கோட்டை பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் 3 பேரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 289 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 152 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 208 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7 ஆயிரத்து 651 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 43 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 155 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 154 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 14 ஆயிரத்து 605 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 419 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 130 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36 ஆயிரத்து 185 பேர் குணமடைந்து உள்ளனர். 614 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்