கிருஷ்ணகிரியில் பெங்களூரு அழகிகளை வைத்து விபசாரம் புரோக்கர்கள் 4 பேர் கைது

கிருஷ்ணகிரியில் பெங்களூரு அழகிகளை வைத்து விபசாரம் புரோக்கர்கள் 4 பேர் கைது.

Update: 2020-11-02 03:19 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடாசலம் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது சாலையோரம் 4 பேர் நின்று கொண்டு, அந்த வழியாக செல்பவர்களிடம் பெங்களூரு அழகிகள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என அந்த வழியாக சென்ற வாலிபர்களிடம் கூறினார்கள். இதை கவனித்த போலீசார், அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வீரப்பள்ளியை சேர்ந்த இளங்கோ(வயது 44), திருப்பத்தூர் சிவராஜ்பேட் சேகர்(50), வேலூர் மாவட்டம் சந்தக்கரை லோகநாதன்(50), ராமநாதபுரம் மாவட்டம் நாம்புதலை கவுதம்(29) ஆகியோர் என்பதும், பெங்களூருவை சேர்ந்த அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து புரோக்கர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பெங்களூருவை சேர்ந்த 3 அழகிகளையும் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்