மீ டு பற்றி சர்ச்சை கருத்து நடிகர் முகேஷ் கன்னா விளக்கம்
’மீ டு’ பற்றிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து நடிகர் முகேஷ் கன்னா விளக்கம் அளித்து உள்ளார்.
மும்பை,
சக்திமான் தொடரில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவா் நடிகர் முகேஷ் கன்னா. இவர் ‘மீ டு’ இயக்கம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
வீட்டை பார்த்துக்கொள்வது தான் பெண்களின் வேலை. அவர்கள் வேலைக்கு போக ஆரம்பித்த பிறகுதான் ‘மீ டூ’ பிரச்சினை உருவானது. ஆண்களுக்கு நிகராக நடக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள் என்றெல்லாம் முகேஷ் கன்னா கூறியிருந்தார். நடிகரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் நடிகர் முகேஷ் கன்னா தான் தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் அளித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
நான் பெண்களை மதிப்பவன். அவர்களின் பாதுகாப்பில் அக்கறை கொள்பவன். பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என நான் ஒருபோதும் சொல்லியதே இல்லை. பெண்கள் வேலைக்கு செல்வதால் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தான் நான் பேசினேன். பெண்கள் வெளியே வர தொடங்கிய பிறகு ‘மீ டு‘ இயக்கம் போன்றவை வந்ததாக நான் எப்போதும் சொல்லியதே இல்லை.
எனது கருத்தை தவறான கண்ணோட்டத்தில் எடுத்து கொள்ள வேண்டாம் என நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளை கேட்டுக்கொள்கிறேன். எனது 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையே நான் பெண்களை எந்த அளவுக்கு மதிப்பவன் என்பதற்கு உதாரணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.