பேஸ்புக் மூலம் பெண் போலீசாரிடம் பழகி பணமோசடி: போலி போலீஸ் அதிகாரி கைது - கல்யாணில் சிக்கினார்
பேஸ்புக் மூலம் பெண் போலீசாரை குறி வைத்து பணமோசடியில் ஈடுபட்டு வந்த போலி போலீஸ் அதிகாரியை கல்யாணில் வைத்து போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
நவிமும்பை கலம்பொலி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் ஒருவருக்கு அண்மையில் பேஸ்புக் மூலம் ஒருவர் நண்பர் ஆனார். அப்போது, தனது பெயர் மிலிந்த் தேஷ்முக் எனவும், உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாகவும் அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் பெண் போலீசின் பேஸ்புக் குறுந்தகவலில் போலீஸ் சீருடையில் மிலிந்த் தேஷ்முக் இருக்கும் புகைப்படத்தை அனுப்பி உள்ளார்.
இதனை நம்பிய பெண் போலீஸ் அவரிடம் நட்பாக பேசி வந்தார். இந்தநிலையில் சில நாள் கழித்து அவர் பெண் போலீசை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, தனது பணப்பை தொலைந்து விட்டதாகவும், தனக்கு அவசரமாக ரூ.10 ஆயிரம் தேவைப்படுவதால் பணம் தந்து உதவும்படியும், சில நாட்களில் பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் கூறினார். இதனை நம்பிய பெண் போலீஸ் இரக்கப்பட்டு அவருக்கு ரூ.10 ஆயிரத்தை கொடுத்து உள்ளார். இந்தநிலையில் சில நாட்கள் கழித்து பெண் போலீஸ், மிலிந்த் தேஷ்முக்கிடம் பணத்தை திருப்பி கேட்டபோது அவர் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த பெண் போலீஸ் இது குறித்து விசாரித்ததில், மிலிந்த் தேஷ்முக் போலி போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் போலீஸ், மிலிந்த் தேஷ்முக் மீது கலம்பொலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசாரின் யோசனைப்படி பெண் போலீஸ், சம்பவத்தன்று மிலிந்த் தேஷ்முக்கிடம் நைசாக பேசி கல்யாண் ரெயில் நிலையத்திற்கு வரவழைத்தார். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த மிலிந்த் தேஷ்முக்கை அங்கு மறைந்து இருந்த போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், போலீஸ் அதிகாரி எனக்கூறி இதே பாணியில் ஏராளமான பெண் போலீசாரிடம் பணமோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.