பெண்களிடம் உல்லாசமாக இருந்த வீடியோ ஆபாச இணையதளத்தில் வெளியிட்ட - பஸ் கண்டக்டர் கைது பரபரப்பு தகவல்கள்

பெண்களிடம் உல்லாசமாக இருந்த வீடியோவை ஆபாச இணையதளத்தில் வெளியிட்ட மாநகராட்சி பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-31 23:00 GMT
வசாய்,

பால்கர் மாவட்டம் விக்ரம் காட் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு தானே மாநகராட்சி போக்குவரத்து துறையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த மிலிந்த் ஜாடே (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் அப்பெண்ணிடம் மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதற்கு பதிலாக தன்னிடம் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அப்பெண்ணை தனிமையி்ல் சந்தித்து உல்லாசமாக இருந்தார். இதனை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஆபாச இணையதளம் ஒன்றில் அவர்கள் உல்லாசமாக இருந்த வீடியோ ஒன்று வெளியானது. இது பற்றி அறிந்த அப்பெண்ணின் உறவினர்கள் விசாரித்ததில், மிலிந்த் ஜாடே தான் ஆபாச இணையதளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் கண்டக்டர் மிலிந்த் ஜாடே ஏற்கனவே வசாய் வாலிவ் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணிடமும் இதே பாணியில் செயல்பட்டு வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்தது.

தன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்ததை அறிந்த மிலிந்த் ஜாடே தலைமறைவானார். மேலும் போலீசில் சிக்காமல் இருக்க அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி வந்தார்.

இந்த நிலையில் ஜவகர் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று மிலிந்த் ஜாடேவை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 63 ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்தனர். இவரை தகானு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மிலிந்த் ஜாடே பால்கர் கல்லூரியில் எம்.ஏ. மற்றும் பி.எட், பயின்ற பட்டதாரி ஆவார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் கண்டக்டராக பணியில் சேர்ந்து உள்ளார்.

ஆபாச இணையதளத்தில் மேலும் சில பெண்களின் ஆபாச வீடியோவை பதிவேற்றி வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையில் அவரது மனைவி கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்