‘மீ டு’ இயக்கம் குறித்து நடிகர் முகேஷ் கன்னா சர்ச்சை கருத்து கடும் எதிர்ப்பு கிளம்புகிறது

‘மீடு’ இயக்கம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகர் முகேஷ் கன்னாவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Update: 2020-10-31 23:00 GMT
மும்பை,

சக்திமான் டி.வி. தொடரில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகர் முகேஷ் கன்னா. இவர் ‘மீ டு’ இயக்கம் குறித்து கூறிய சர்ச்சை கருத்து வருமாறு:-

ஆண், பெண்கள் வேறுபட்டவர்கள். வீட்டை பார்த்து கொள்வது தான் பெண்ணின் வேலை. இதுபோன்ற கருத்தை சொல்வதால் என்னை மன்னித்து கொள்ளுங்கள். பெண்கள் வேலைக்கு செல்ல தொடங்கிய பிறகு தான் ‘மீ டு‘ இயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இன்று பெண்கள், ஆண்களின் தோள் மீது ஏறி செல்வது பற்றி பேசுகின்றனர். பலர் பெண் சுதந்திரம் பற்றி பேசுகின்றனர். அங்கு தான் பிரச்சினை தொடங்கி இருக்கிறது. இதனால் வீட்டில் இருக்கும் குழந்தை தான் முதலில் பாதிக்கப்படுகிறது. ஆண்கள் செய்வதை நாங்களும் செய்வோம் என பெண்கள் சொல்ல தொடங்கிய போது தான் இந்த பிரச்சினைகள் தொடங்கி உள்ளது. அப்படியில்லை, ஆண், ஆண் தான். பெண், பெண் தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகர் முகேஷ் கன்னாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. குறிப்பாக நெட்டிசன்கள் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்