மண்டியாவில் பயங்கரம்: காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை - இளம்பெண்ணின் சகோதரர்கள் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
மண்டியாவில் காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய இளம்பெண்ணின் சகோதரர்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.;
மண்டியா,
மண்டியா அருகே பசவனகுடி சுவரணா சந்திரா படாவனே பகுதியை சேர்ந்தவர் துந்துமாது. விவசாயியான இவர் பால் விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் சுமந்த் (வயது 20). இந்த நிலையில் சுமந்த் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 3 பேர் வந்தனர். அவர்கள் சுமந்திடம் தகராறு செய்தனர். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மர்மநபர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுமந்தை வெட்ட முயன்றனர்.
இதனால் சுமந்த் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் விடால் அவரை துரத்திய 3 பேரும் சுமந்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சுமந்த் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மண்டியா கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கொலையான சுமந்த் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மண்டியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. அதாவது கொலையான சுமந்த், வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதைதொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணை, சுமந்த் கடத்திச் சென்றிருந்தார். பின்னர் சுமந்தும், இளம்பெண்ணும் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அப்போது இருவரின் பெற்றோர்களையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் இளம்பெண், தனது பெற்றோருடன் செல்வதாக கூறி சென்றார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சுமந்த் பெயரை போலீசார் ரவுடி பட்டியலில் சேர்த்து இருந்தனர். எனவே இந்த முன்விரோதத்தில் இளம்பெண்ணின் சகோதரர், கூட்டாளிகளுடன் சேர்ந்து சுமந்தை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
சம்பவம் பற்றி துந்துமாது கூறுகையில், எனது மகன் வீட்டு வெளியே நின்றிருந்தான். அப்போது இளம்பெண்ணின் சகோதரர்கள் உள்பட 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் சுமந்தின் கண்களில் மிளகாய் பொடி தூவினர். இதனால் அவர்களிடம் இருந்து சுமந்த் தப்பி ஓடினான். ஆனால் 3 பேரும் ஓட, ஓட விரட்டிச் சென்று சுமந்தை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். எனது மகன் கொலைக்கு இளம்பெண்ணின் சகோதரரும், அவரது கூட்டாளிகளும் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மண்டியா கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இளம்பெண்ணின் சகோதரர்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.