திருவள்ளூர் மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக பொன்னையா பதவியேற்பு
திருவள்ளூர் மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்ட பா.பொன்னையா நேற்று முறைப்படி பதவியேற்று கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பதவி வகித்து வந்த மகேஸ்வரி ரவிக்குமாரை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராகவும், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த பா.பொன்னையாவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டராகவும் இடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பா.பொன்னையா நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று பதவியேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.லோகநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
முன்னதாக அவர் திருவள்ளூரில் உள்ள புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் வந்து முறைப்படி கையெழுத்திட்டு பதவியேற்று கொண்டார்.
அதன்பின்னர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பொன்னையா, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோவிலுக்கு நேற்று மாலை குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார் அவர்களுக்கு கோவில் அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு அவர் குடும்பத்துடன் காரில் திருவள்ளூருக்கு புறப்பட்டு சென்றார்.