மண்டபத்தில் இருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம் - குடும்பத்தினர் பரிதவிப்பு

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் பரிதவிப்பில் உள்ளனர்.

Update: 2020-10-30 12:00 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கோவில்வாடி கடற்கரையில் இருந்து, தங்கச்சிமடம் சிப்பிரியான் என்பவரது விசைப்படகில் நேற்று முன்தினம் படகின் உரிமையாளர் சிப்பிரியான், மீனவர்கள் டேவிட், ஆரோக்கியம், சூசை ஆகிய 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நேற்று காலை இவர்கள் கரைக்கு திரும்பி இருக்க வேண்டும். கடலுக்கு சென்ற மற்ற அனைத்து படகுகளும் திரும்பிவிட்ட நிலையில் இந்த படகு மட்டும் கரை திரும்பவில்லை. இதனால் மற்ற மீனவர்கள் படகில் சென்று, மாயமான மீனவர்களை தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி விட்டனர்.

இது குறித்து ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாயமான மீனவர்கள் கரை திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் பரிதவிப்பில் உள்ளனர்.

மேலும் செய்திகள்