திருச்சி அண்ணாசிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி அண்ணாசிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 80 பேர் மீது வழக்கு.

Update: 2020-10-29 01:48 GMT
மலைக்கோட்டை, 

ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க இந்த ஆண்டே அனுமதி வழங்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில், நேற்று காலை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை செயலாளர் அரசு, திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 80 பேர் மீது கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்