4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். பேராசிரியர் செல்வகுமார், சங்க ஆலோசகர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் அண்ணா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளதை திரும்ப பெறவேண்டும். ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை 40 ஆக குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ள உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
உயர்கல்வி
தமிழ்நாட்டில் கல்வித் துறையில் உயர்கல்வி பயில முன் அனுமதி வேண்டி உரிய முறையில் விண்ணப்பித்துள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயர் கல்வி பயின்றதற்கான பின்னேற்பு அனுமதி ஆணையை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.